நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அம்னோ ஒருபோதும் ‘போஸ்கூ’வை கைவிட்டது இல்லை: நஜ்புடின்

கோலாலம்பூர்:

கடந்த மூன்று ஆண்டுகளாக கட்சியின் முன்னாள் தலைவரான தனது தந்தைக்கு நீதி சுதந்திரத்தை பெற்றுத் தர அம்னோ மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகள் பாராட்டுக்குரியது.

பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டத்தோஸ்ரீ  நஜிப் தனது குடும்பத்துடன் திரும்ப அனுமதிக்கும் வகையில் அவரது தண்டனையைக் குறைப்பதை அவரது கட்சி மாட்சிமை தங்கிய மாமன்னரின் விருப்பத்திற்கு விட்டுவிட்டதாகவும் நஜ்புடின் நஜிப் கூறினார்.

பல ஆண்டுகளாக, நீதிமன்றத்திற்கு மேலும் கீழும் செல்வது எளிதான பயணம் அல்ல என்பதை நாங்கள் அறிவோம்.

இருப்பினும் இன்று வரை கட்சி, ‘போஸ்கூ’ நண்பர்கள், தேசிய,  அரசாங்கத் தலைவர்கள் ஒருபோதும் பாஸ்குவை கைவிட்டதில்லை.

எனவே, முயற்சிகள் தொடர வேண்டும் என்று அவர் கூறினார்.

நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்துள்ளோம், நம்பிக்கை துவாங்கு அகோங்கின் சக்தியில் உள்ளது என்பதை நாங்கள் அறிவோம்.

மாமன்னரின் அதிகாரத்தால்  அவர் உதவ ஒரு முடிவை எடுக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கோலாலம்பூரில் உள்ள உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற அம்னோ 2025 பொதுப் பேரவையுடன் இணைந்து ஊடகங்கள் சந்தித்தபோது அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset