நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துகாஜாவில் 1000 பேருக்கு தீபாவளி உணவுக் கூடைகள்: மனிதவள அமைச்சர் சிவக்குமார் வழங்கினார்

ஈப்போ:

தித்திக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மனிதவள அமைச்சர் வி. சிவக்குமார் தனது பத்து காஜா நாடாளுமன்றத் தொகுதியில் ஆயிரம் பேருக்கு உணவுக் கூடைகளை வழங்கினார்.

மெங்கெலும்பு சட்டமன்ற தொகுதியில் 300 பேருக்கும் ஜெலாபாங் சட்டமன்ற தொகுதியில் 350 பேருக்கும் துரோனோ சட்டமன்றத் தொகுதியில் 350 பேருக்கும் இந்த உணவுக் கூடைகள் வழங்கப்பட்டது.

தீபாவளியை கொண்டாடி மகிழும் வசதி குறைந்த மக்களுக்கு இந்த உணவுக் கூடைகள் நேரடியாக வழங்கப்பட்டது.

உணவுக் கூடைகளை பெற்றுக் கொண்ட மக்கள்  அமைச்சர் சிவகுமாருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

பெருநாள் காலங்களில் பத்துகாஜா நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு பல  வகைகளில் அமைச்சர் சிவக்குமார் உதவிகளை வழங்கி வருகிறார்.

அந்த வகையில் இவ்வாண்டும் வசதி குறைந்த மக்களுக்கு அவர் பண்டிகைக்கால உதவிகளை வழங்கி இருக்கிறார்.

மனிதவள அமைச்சர் சிவக்குமாரின் அரசியல் செயலாளர் ஸ்டீவன் சாவ் மூலமாக சம்பந்தப்பட்ட மக்களுக்கு உதவிகள் கிடைத்துள்ளன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset