செய்திகள் மலேசியா
சிபுவில் எட்டு கடைகள் கொண்ட கட்டிடம் இடிந்து விழுந்தது
கூச்சிங்:
இன்று அதிகாலை சிபு பகுதியில் உள்ள சுங்கை மேரா, ஜாலான் பஹ்லாவான் சாலையில் அமைந்திருந்த கடைகளின் வரிசை கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.
சரவாக் மாநிலத்தின் தீயணைப்பு, மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டு கட்டுப்பாட்டு மையம் (PGO), இந்தச் சம்பவம் குறித்து அதிகாலை 2.46 மணிக்கு அவசர அழைப்பைப் பெற்றதாகத் தெரிவித்துள்ளது.
அதன் பின்னர், சுங்கை மேரா தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து ஒரு குழு உடனடியாக சம்பவ இடத்தைக் காலை 2.52 மணிக்கு அடைந்ததாக PGO-வின் பேச்சாளர் கூறினார்.
“போலீசாருடன் இணைந்து மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணையில், எட்டு கடைகள் கொண்ட ஒரு முழு வரிசை கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, அந்த இடத்தில் யாராவது சிக்கிக் கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் காரணமாக உடனடியாக மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், சம்பவம் நடைபெற்ற நேரத்தில் எந்த நபரும் கடைகளுக்குள் இல்லை என்பதை உறுதி செய்ய, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களைப் போலீசார் தொடர்பு கொண்டதாகவும் அவர் கூறினார்.
முழுமையானச் சோதனைக்குப் பின் இந்தச் சம்பவத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்றும், சம்பவ இடம் தற்போது பாதுகாப்பாகவும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் உறுதி செய்யப்பட்டது.
“அதிகாலை 3.50 மணிக்கு மீட்பு நடவடிக்கை முழுமையாக நிறைவடைந்தது. சம்பவத்திற்கான காரணம் மற்றும் ஏற்பட்ட சேத மதிப்பீடு குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்,” என்று அவர் தெரிவித்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 13, 2026, 6:21 pm
லோரி ஓட்டுநர் பிரச்சினைகளுக்கு நீதிக் கோரி பேரணி 2.0 நடத்தப்படும்: டத்தோ கலைவாணர்
February 13, 2026, 5:41 pm
ஹம்சாவுடன் சேர்ந்து பல பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்
February 13, 2026, 5:30 pm
ஹம்சா ஜைனுடின் நீக்கம்
February 13, 2026, 3:35 pm
சரவாக் மாநிலத்தின் 2030 ஆண்டிற்கான முன்னேற்றத் திட்டங்களின் அறிவிப்பு: டான் ஸ்ரீ அபாங் ஜோஹாரி
February 13, 2026, 1:51 pm
டான்ஸ்ரீ அசாம் பாக்கியை இடைநீக்கம் செய்ய பிரதமருக்கு 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்து
February 13, 2026, 1:23 pm
போலிஸ் குடியிருப்பில் மோட்டார் சைக்கிளை திருட முயன்ற ஆடவர் கைது
February 13, 2026, 1:21 pm
எதிர்திசையில் பயணம் செய்த இரு மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்: காஜாங் போஸீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது
February 13, 2026, 1:14 pm
பொது இடத்தில் குப்பை வீசிய நால்வர் நீதிமன்ற உத்தரவால் துப்புரவு பணியில் ஈடுபட்டனர்
February 13, 2026, 12:25 pm
