நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டில் நீரிழிவு நோயாளிகளில் முதல் இடத்தில் மலேசிய இந்தியர்கள்: பி ப சங்கம் எச்சரிக்கை 

பினாங்கு:

நீரிழிவு நோயால் மலேசியாவில் 36 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அவர்கள் தினந்தோரும் 26 தேக்கரண்டி வெள்ளைச் சீனியை உட்கொள்வதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரித்துள்ளது.

நீரிழிவால் அதிகமாக இந்தியர்களே பாதிக்கப்பட்டுள்ளனர் என பி.ப.சங்கத்தின் கல்வி மற்றும் ஆய்வுப் பிரிவு அதிகாரி என்.வி.சுப்பாராவ் தெரிவித்தார்.

மலாய்க்காரர்கள் 15.25%, சீனர்கள் 12.87% இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது என அவர் கூறினார்.

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 14 ம் தேதியை நீரிழிவு தினமாக உலக சுகாதார நிறுவனம் கொண்டாடுகிறது.

மலேசியாவில், 18 வயதுக்கும் மேற்பட்டவர்களில், 36 லட்சம் பேர் நீரிழிவால் பாதிக்கப்பட்டிருப்பதை மலேசிய சுகாதார அமைச்சு கூறியுள்ளதை சுப்பாராவ் சுட்டிக்காட்டினார்.

மலேசிய இந்தியர்கள் நீரழிவால் பாதிக்கப்பட்டிருப்பதற்கு அவர்களின் உணவுப் பழக்கமே முக்கிய காரணமாக இருக்கின்றது.

இந்திய உணவுகளில் அதிகம் நாம் வெள்ளைச் சீனியை சேர்த்துக் கொள்கின்றோம்.

நேற்று தீபாவளி பண்டிகைக்காக விற்கப்பட்ட பலகாரங்களில் அதிக அளவு வெள்ளைச் சீனி  பயன்படுத்தப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

முன்பு பெரியவர்களுக்கு மட்டும் வந்த நீரிழிவு இப்போது 2 வயது குழந்தைகளுக்கும் வந்துவிட்டது என்றார்.

ஒவ்வொரு 5 மலேசியர்களில் ஒருவருக்கு நீரழிவு இருக்கின்றது.

நீரிழிவு ஏற்பட்ட 5 பேரில் நால்வர் இருதய நோயினால் இறக்கின்றார்கள்.

வெள்ளைச் சீனிக்கும் 60 விதமான நோய்களுக்கும் தொடர்பு இருப்பதாக சுப்பாராவ் தெரிவித்தார்.

வெள்ளச் சீனி மெல்லக் கொள்ளும் ஒரு நஞ்சு என்று கூறிய அவர் ஒரு டின் சுவைபானத்தில் 7-9 தேக்கரண்டி சீனி உள்ளது.

 இதனால் மலேசியர்கள் ஒவ்வொரு நாளும் 26 தேக்கரண்டி வெள்ளைச் சீனியை மறைமுகமாக உட்கொண்டு வருகின்றனர்.

ஆகவே நாம் உடனடியாக நமது உணவு பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

வெள்ளைச் சீனி சேர்க்கப்படாத உணவுகளை நமது குழந்தைகளுக்கு தயாரித்து கொடுக்க வேண்டும்.

நாட்டில் நீரிழிவு தொடர்பான பிரச்சனைகளை கையாள்வதற்கான முயற்சிகளை செயல்படுத்த ஆண்டுதோறும் அரசாங்கம் 4.9 பில்லியன் ரிங்கிட்டை செலவிடுகிறது.

சுகாதார அமைச்சின் தரவுப்படி நீரிழிவின் பாதிப்பு 2011 ல் 11.2 சதவீதத்திலிருந்து 2015 ல் 13.4 சதவீதமாக அதிகரித்துள்ளது, பின்னர் 2019 ல் 18.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மேலும் ஐந்து மற்றும் ஆறு வயதுடைய குழந்தைகள் வகை II நீரிழிவால் பாதிக்கப்படுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே நீரிழிவை தடுக்க பள்ளிக் குழந்தைகள் ஆரோக்கியமற்ற உணவுகளை வாங்க ஆசைப்படாமலிருக்க பள்ளி கேன்டீன்களில் நொறுக்குத் தீனிகள் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும்.

பள்ளிகளைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்கு விதிகள் ஏற்படுத்த வேண்டும்.

மருத்துவமனைகள், விமான நிலையங்கள், பள்ளிகள் போன்ற பகுதிகளில்  நொறுக்குத் தீனிகள் மற்றும் சர்க்கரை பானங்களை வழங்கும் விற்பனை இயந்திரங்களை அகற்ற வேண்டும். 

பெற்றோர்கள் தங்களது வீடுகளில் சமைத்த உணவுகளை வீட்டு குடும்ப உறுப்பினர்களுக்கு தயார் செய்து தரவேண்டும்.

வெள்ளைச் சீனிக்கு பதில் இனிப்பு வேண்டுவோருக்கு பாரம்பரிய நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்திக் கொள்ளலாம் என சுப்பாராவ் ஆலோசனை கூறினார்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset