நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இணையப் பாதுகாப்பு துறையில் மலேசியா  முன்னோடியாகத் திகழும் : பிரதமர் அன்வார் 

கோலாலம்பூர் : 

இணையப் பாதுகாப்பு துறையில் மலேசியா முன்னோடியாகத் திகழும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.  

இணையப் பாதுகாப்பு துறையில் மலேசியா முன்னோடியாகத் திகழ்வதன் மூலம் ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கு தலைமையேற்கும் மலேசியாவின் நற்பெயர் ஆசியான் அளவில் அறியப்படும் என்று  பிரதமர்  கூறினார். 

மேலும், இத்திட்டம் நாட்டின் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. 

குறிப்பாக நாட்டின் முக்கியமான தகவல் உள்கட்டமைப்பைப் (NCII) பாதுகாப்பதில் தேசிய இணையப் பாதுகாப்பு குழு முழு ஆதரவை வழங்குகிறது. 

அதோடு, 2025-ஆம் ஆண்டுக்கான இணையப்  பாதுகாப்பு மற்றும்  கண்காட்சி மாநாட்டில் இத்திட்டம் குறித்துத் தமக்கு விளக்கப்பட்டதாக அன்வார் கூறினார் . 

நாட்டின் இணையப் பாதுகாப்பு உத்திகளை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கியமாகும். 

அதனுடன், கல்வி, தொழில்ஆகிய துறைகளுக்கு வலுவான  இணையப் பாதுகாப்பு அமைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். 

- சாமுண்டிஸ்வரி பத்துமலை & அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset