நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிரியாவிலுள்ள மலேசியர்களை உடனடியாக நாட்டிற்கு கொண்டு வரும் திட்டம் அரசுக்கு இல்லை : முஹம்மத் ஹசன்

புத்ரா ஜெயா :  

சிரியாவிலுள்ள 50 மலேசியர்களை உடனடியாக நாட்டிற்கு கொண்டு வரும் திட்டம் அரசுக்கு இல்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசன் தெரிவித்தார். 

வெளியுறவுத் துறை அமைச்சகம், சிரியாவிலுள்ள மலேசியத் தூதரகம் மூலம், அங்குள்ள மலேசியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார். 

அங்குள்ள மாணவர்களின் அண்மை நிலை குறித்து, மலேசியத் தூதரகம் விஸ்மா புத்ராவிடம் தகவல் தெரிவித்து வருவதாக ஹசன் கூறினார். 

சிரியாவிலுள்ள மலேசியர்கள் 'https://ekonsular.kln.gov.my' எனும் அகப்பக்கத்தில் தங்களின் வருகையைப் பதிவு செய்ய வேண்டும்.  

சிரியா தூதரகத்தை samir@honconsuladvisor.my என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது  +963 93324 5555 என்ற எண் மூலமாக தொடர்புக்  கொள்ளலாம்.

- தர்மவதி கிருஷ்ணன் & அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset