நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொதுக் கழிப்பறையில் பாலியல் வன்கொடுமை: குற்றவாளியைக் கடித்தும் நகத்தால் கீறியும் தப்பித்தார்

குளுவாங்:

பொதுக் கழிப்பறையில் பாலியல் வன்கொடுமைக்கு இலக்கான  பெண் குற்றவாளியைக் கடித்து, நகத்தால் கீறி தப்பித்தார்.

இதனை குளுவாங் மாவட்ட போலிஸ் தலைவர் பஹ்ரின் முஹம்மத்  நோ இதனை கூறினார்.

இங்குள்ள லாமான் கம்போங் மலாயுவில் உள்ள பொதுக் கழிப்பறையில் 24 வயதான அப் பெண் இக் கொடூரத்திற்கு இலக்கானார்.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தன்னை காப்பாற்றி கொள்ள கத்தி அலறியுள்ளார்.

அதே வேளையில் குற்றவாளியைக் கடித்து, நகத்தால் கீறி தப்பித்தார்.

இதனை தொடர்ந்து 34 வயதான அவ்வாடவர் சம்பவ இடத்தில் தப்பிக்க முயன்றார்.

அப்போது அங்குள்ள இளைஞர்கள் அவ்வாடவனை மடக்கி பிடித்து போலிசாரிடம் ஒப்படைத்தனர்.

சந்தேக நபர் 34 வயதான வேலையில்லாதவர் என்றும், அவர் முன்பு கதவு மூடியிருந்த கழிவறையில் மறைந்திருந்ததாகவும் பஹ்ரின் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset