நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மருத்துவ அதிகாரிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய சுழற்சி முறை செயல்ப்படுத்தப்படும்: லுக்கானிஸ்மான் அவாங்

பெட்டாலிங் ஜெயா:

மருத்துவ அதிகாரிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய சுழற்சி முறை செயல்ப்படுத்தப்படும் என்று சுகாதாரத் துறை துணை அமைச்சர் லுக்கானிஸ்மான் அவாங் சௌனி தெரிவித்தார்.

நகர்புற மற்றும் புறநகர் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைகளில் வேலை வாய்ப்பு செயல்முறையை மேம்படுத்தவும் மருத்துவ அதிகாரிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் இந்தச் சுழற்சி முறையை அமல்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

மேலும், மருத்துவ அதிகாரிகளிடையே அதிகமான மனஅழுத்தத்தைக் குறைக்கவும் அவர்களின் மன ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டும் இந்தச் செயல்திட்டத்தை அமல்படுத்துவதாக அவர் சுட்டினார்.

மருத்துவ அதிகாரிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 1500 -க்கு அதிகமான மருத்துவ அதிகாரிகளுக்கான பணியிடங்கள் உட்பட சுகாதாரப் பாதுகாப்புத் துறையில் 16,347 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் மொத்த பணியாளர் தரவுகள் அடிப்படையில் மொத்தம்  299,672 பேர் சுகாதாரப் பணியாளர்கள்  இருக்கின்றனர். 

அவர்களில் 7,720 மருத்துவ நிபுணர்கள், 44,030 மருத்துவ அதிகாரிகள், 7,626 பல் மருத்துவர்கள், 12,775 மருந்தாளுனர்கள், 70,075 செவிலியர்கள், 9,798 மருத்துவ அலுவலர்கள் ஆவர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset