நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசு ஊழியர்கள்  சீரான உடல் எடை குறியீட்டை (பிஎம்ஐ) கொண்டிருப்பது கட்டாயம் இல்லை: பொதுசேவை துறை  

புத்ரா ஜெயா :  

அனைத்து அரசு ஊழியர்களும் சீரான உடல் எடை குறியீட்டை (பிஎம்ஐ) கொண்டிருப்பது கட்டாயம் இல்லை என்று பொது சேவைத் துறை தெரிவித்தது. 

முன்னதாக, 2025 -ஆம் ஆண்டு முதல் அனைத்து அரசு ஊழியர்களும் சீரான உடல் எடை குறியீட்டைக் கொண்டிருப்பதை பொது சேவை துறை  கட்டாயமாக்கியுள்ளது என்று மிரி மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஜாக் வோங் ஓர் அறிக்கையில் வெளியிட்டார்.

அவ்வாறு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று பொதுசேவை துறை பதிலளித்தது. 

சுகாதாரத் துறை, அரசு ஊழியர்களிடையே உடல் பருமான் பிரச்சனையை நிவர்த்தி செய்ய எடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க பொதுசேவை துறை தயாராகவுள்ளது. 

அறிக்கை வெளியிடுவதற்கு முன்னதாக அனைத்துக் கூறுகளையும் கருத்தில் கொள்ளுமாறு பொது சேவை துறை கேட்டுக் கொண்டது. 

- தர்மவதி கிருஷ்ணன் & அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset