நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டிசம்பர் 20-ஆம் தேதி வரை நாட்டின் பல மாநிலங்களில் மழை பெய்யும்: மலேசிய வானிலை ஆய்வு மையம்

கோலாலம்பூர்:

டிசம்பர் 20-ஆம் தேதி வரை மலேசியாவின் பல மாநிலங்களில் மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

திரங்கானு,பகாங், ஜொகூர் போன்ற மாநிலங்களில் கனமழை பெய்யும்.

திரங்கானுவில் டுங்குன், கெமாமான் பகுதிகள் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் பஹாங்கில் ஜெராந்துட்,மாறான், குவாந்தான்,பெக்கான் மற்றும் ரொம்ப்பின் போன்ற பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், ஜொகூர் மாநிலத்தில் செகாமாட்,குலுவாங்,மெர்சிங்,குலாய், கோத்தா திங்கி மற்றும் ஜொகூர் பாரு போன்ற இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட கூடும் என்று மெட் மலேசியா எச்சரித்துள்ளது.

தொடர்ந்து, சரவா மாநிலத்தில் கூச்சிங், செரியான், சமரஹான்,ஶ்ரீ அமான்,பெத்தொங்,சரிக்கெய்,சிபு மற்றும் முக்கா போன்ற பகுதிகள் பாதிக்கப்படக் கூடும் என நம்பப்படுகிறது.

அதோடு, சபா மாநிலத்தில் பந்தாய் பாராட் மாவட்டம்,சன்டாக்கான் மாவட்டம் மற்றும் குடாட் மாவட்டம் பாதிக்கப்படக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி மலேசிய வானிலை ஆய்வு மையத்தால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

- கௌசல்யா ரவி & அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset