நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரோன் 97 பெட்ரோலின் விலை 3 சென் உயர்வு

கோலாலம்பூர்:

இன்று நள்ளிரவு முதல் ரோன் 97 பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 காசுகள் அதிகரிக்கவுள்ளது.

ரோன் 97 பெட்ரோலின் விலை லிட்டருக்கு 3.19 ரிங்கிட்டில் இருந்து 3.22 ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது.

அதே வேளையில் ரோன் 95 பெட்ரோலின் விலை 2.05 ரிங்கிட்டாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

தீபகற்ப மலேசியாவில் டீசலின் விலை 2.95 ரிங்கிட்டாக  நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

சபா, சரவா, லாபுவானில் டீசலின் சில்லறை விலை லிட்டருக்கு 2.15 ரிங்கிட்டாக இருக்கும்.

புதிய கட்டணம் வரும் டிசம்பர் 19 முதல் டிசம்பர் 25 வரை அமலில் இருக்கும் என்று நிதியமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset