நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குடியுரிமை விண்ணப்பங்களுக்கு ஒரு வருடத்திற்குள் முடிவு அறிவிக்கப்படும்: சைபுடின்

கோலாலம்பூர்:

அடுத்த ஆண்டு முதல் ஒவ்வொரு குடியுரிமை விண்ணப்பங்களும் ஓராண்டுக்குள் முடிவு செய்யப்படும்.

உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ  சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் இதனை கூறினார்.

குடியுரிமைப் பிரச்சினைகளை திறமையாக கையாள்வதற்காக, உள்துறை அமைச்சால் அமைக்கப்பட்டுள்ள ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறை இதுவாகும்.

மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன் உறுதி செய்வதற்கான மடானி அரசாங்கத்தின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியே இந்த முயற்சி.

அதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு முதல், குடியுரிமைப் பெறுவதற்கான ஒவ்வொரு விண்ணப்பமும் ஒரு வருடத்திற்குள் முடிவு எடுத்து அறிவிக்கப்படும் என்று டத்தோஶ்ரீ சைபுடின் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset