நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

தளபதின்னா தளபதி மட்டும் தான்: லியோ வெற்றி விழாவில் நடிகர் விஜய்யின் அனல் பறந்த பேச்சு 

சென்னை: 

தளபதின்னா தளபதி மட்டும் தான்; ரசிகர்களுக்காக தாம் என்றும் கடமைபட்டுள்ளேன் என்று அனல் பறந்த நடிகர் விஜய்யின் பேச்சு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. 

லியோ திரைப்படத்தின் வெற்றி விழா நேற்றிரவு  சென்னையில் பிரம்மாண்ட முறையில் நடைபெற்று முடிந்தது. அதில் உரையாற்றிய நடிகர் விஜய் ரசிகர்கள் உற்சாகம் பொங்க உரை நிகழ்த்தி அசத்தினார். 

லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ரசிகர்கள் அனைவருக்கும் அவர் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்த 'லியோ' திரைப்படம் கடந்த 19ஆம் தேதி வெளியானது. 

பல்வேறு சர்ச்சைகளை தாண்டி வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset