நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

லியோ திரைப்படத்திற்கு காலை 7 மணி காட்சிகளுக்கு அனுமதி இல்லை: தமிழக அரசு அறிவிப்பு 

சென்னை: 

லியோ திரைப்படத்திற்கு காலை 7 மணி காட்சிகளுக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. 

அரசாணையின்படி அக்டோபர் 19ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை லியோ படத்திற்கு காலை 9 மணி காட்சிகளுக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் உள்துறை செயலாளர் அமுதா கூறினார். 

முன்னதாக நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் அதிகாலை 4 மணி, காலை 7 மணி சிறப்பு காட்சிகளைத் திரையிட நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. 

இருப்பினும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நடவடிக்கை ஏற்படும் என்ற காரணத்திற்காக லியோ படத்திற்கான சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி தரவில்லை என்று குறிப்பிடப்பட்டது. 

லியோ திரைப்படம் நாளை அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset