நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் அம்பானி: அதானி பின்னுக்கு தள்ளப்பட்டார்

மும்பை:  

இந்திய பணக்கரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார் என்று ஹுருன் இந்தியா பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த அதானி நிறுவனங்களின் தலைவர் கௌதம் அதானி இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஜனவரியில் வெளியிட்ட அறிக்கையால் அதானியின் சொத்து மதிப்பு சரிந்தது.

எனினும், 2019இல் 6வது இடத்தில் இருந்த அதானியின் சொத்துகள் நிகழாண்டு 5 மடங்கு அதிகரித்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.

முகேஷ் அம்பானியின் சொத்துகள் கடந்த 5 ஆண்டுகளில் 2.1 மடங்கும், மூன்றாம் இடத்தில் உள்ள தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் அதார் பூனவாலாவின் சொத்து மதிப்பு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

ஹெச்சிஎல் நிறுவனத்தின் தலைவர் சிவ் நாடார் நான்காவது இடத்தில் உள்ளார்.  
இந்தியாவில் 51 பணக்காரர்களின் சொத்துகள் நிகழாண்டு இரட்டிப்பாகி உள்ளது. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 24}ஆக இருந்தது.

முதல் 10 இடங்களில் உள்ள பணக்காரர்களும் அவர்களின்  சொத்து மதிப்பும் (லட்சம் கோடியில்):  முகேஷ் அம்பானி ரூ.8.08, கௌதம் அதானி ரூ.4.47, அதார் பூனவாலா ரூ.2.78, சிவ நாடார் ரூ.2.28, கோபிசந்த் ஹிந்துஜா ரூ.1.76, திலீப் சங்வி ரூ.1.64, எல்என் மித்தல் ரூ.1.62, ராதாகிருஷ்ணன் தாமினி ரூ.1.43, குமார மங்களம் பிர்லா ரூ.1.25,  நீரஜ் பஜாஜ் ரூ.1.20 என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset