நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

ஈரான் துறைமுகத்தை 10 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்தது இந்தியா

புது டெல்லி:

ஈரானில் சாபஹார் துறைமுகத்தை இந்தியா  10 ஆண்டுகள் குத்தகை எடுத்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் ஈரானில் கையெழுத்தானது.

வெளிநாட்டில் துறைமுகத்தை குத்தைக்கு இந்தியா எடுப்பது இதுவே முதல்முறையாகும். இது மத்திய ஆசிய பிராந்தியத்தில் இந்தியா - ஈரான் - ஆப்கானிஸ்தான் இடையேயான வணிகம் வலுவடையும்.

பாகிஸ்தானின்  வழித்தடத்தை புறக்கணித்து இந்தியா இந்தத் திட்டத்தை மேற்கொண்டுள்ளது. டெஹரானில் நடைபெற்ற இந்த குத்தகை ஒப்பந்தத்தின்போது ஈரான் வெளியுறவு அமைச்சர் அமிராப்தோலஹியானிடம் இந்திய அமைச்சர் சர்வானந்த சோனோவால் 250 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவிக்கான கடிதத்தை அளித்தார்.

2003ம் ஆண்டு சபஹார் துறைமுகத்தை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு,  2013இல் அத் துறைமுக துறைமுக மேம்பாட்டுக்காக 100  மில்லியன் டாலர்களை இந்தியா முதலீடு செய்தது.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset