நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

பேராவில் தொழில் துறையில் ஈடுபட தமிழக நிறுவனம் ஆர்வம்

ஈப்போ:

பேராவில் தொழில் துறைகளில் ஈடுபட தமிழகம் ராமநாத மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கே. சிராஜூடின் ஆர்வம் கொண்டுள்ளார்.

அனைத்துலக ஹோட்டல், போக்குவரத்து தொடர்பு துறைகளில் ஈடுபட்டுள்ள அவர் பேரா மாநிலத்தில் தொழில் துறைகளில் ஈடுபட முனைப்பை காட்டியுள்ளார்.

அது தொடர்பாக பேரா மாநிலத்தில் உள்ள சில தொழில் அதிபர்களுடன் இன்று ஈப்போவில் உள்ள தொழில் அதிபர்களுடன் பேர்ச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் பேரா மாநில மந்திரி புசாரை சந்திப்பதற்கு முன்பு மாநில  ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசனை சந்தித்து  ஆலோசனை  பெறப்படும் என்று  குறிப்பிட்டார்.

இந்த நாட்டில் குறிப்பாக இந்தியர்கள் அதிகமாக உள்ள மாநிலமாக பேரா மாநிலமல விளங்குவதால் இம்மாநிலத்தில் தொழில் துறைகளில் ஈடுபட ஆர்வம் கொண்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தார்.

இங்கு தொழில் துறைகளில் ஈடுபடுவதின் வழி இருநாடுகளுக்கான  வரத்தக உறவிகள் வலுபெற வாய்ப்பு உள்ளது என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset