நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

ஷெல் பெட்ரோல் நிலையங்களை விற்கப் பேச்சுவார்த்தை

கோலாலம்பூர்: 

நாட்டில் உள்ள தனது பெட்ரோல் நிலையங்களை சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான சவூதி அராம்கோவிடம் விற்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக ஷெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மலேசியாவில் உள்ள ஷெல் பெட்ரோல் நிலையங்கள் ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்கப்படக்கூடும்.

பேச்சுவார்த்தைகள் குறித்து மேல் விவரங்களை வெளியிட ஷெல் நிறுவனம் மறுத்துவிட்டது.

அராம்கோ நிறுவனமும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

லண்டனை மையமாகக் கொண்ட ஷெல் நிறுவனத்துக்கு நாட்டில் ஏறத்தாழ 950 பெட்ரோல் நிலையங்கள் உள்ளன.

பெட்ரோல் நிலையங்களை விற்பனை செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை 2023ஆம் ஆண்டிறுதியில் தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அடுத்த சில மாதங்களில் ஒப்பந்தம் கையெழுத்திடப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset