செய்திகள் மலேசியா
நம்பிக்கை வர்த்தக விருதுகள் & நட்சத்திர விருதுகள் 2023 -செய்தியாளர்கள் சந்திப்பு
கோலாலம்பூர்:
மலேசியாவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் நம்பிக்கை குழுமம் “நம்பிக்கை வர்த்தக விருதுகள்”, "நம்பிக்கை நட்சத்திர விருதுகள்" 2023 என மாபெரும் இரண்டு விருதளிப்புகளை நடத்தவுள்ளது.
இந்த ஆண்டில் மிகப் பிரம்மாண்டமான இந்த விருது விழாக்கள், எதிர்வரும் அக்டோபர் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் இரவு 7.30 மணிக்கு டேவான் துன் ரசாக், பேங்க் ரக்யாட் மண்டபம், ஜாலான் டிராவர்ஸ், கோலாலம்பூர், மலேசியாவில் நடைபெறவிருக்கின்றது.
இந்த ஆண்டு முதன் முறையாக நடக்கும் "நம்பிக்கை வர்த்தக விருதுகள்" விழாவில் மலேசியத் திருநாட்டில் நமது இந்தியர்களின் அடையாளம் தொடர்ந்து நிலைபெறுவதற்கு உழைத்த தொழில் முனைவோர்களை அடையாளம் கண்டு கௌரவிக்கவிருக்கின்றோம்.
இந்தியச் சமுதாயத்தின் மிகப் பெரிய உச்சத்தைத் தொட்ட தொழில் முனைவோர்களை அடையாளம் கண்டு நம்பிக்கை வர்த்தக விருது விழா நடைபெறவிருக்கின்றது. இந்த விழாவில் அனைத்துத் துறை சார்ந்த வர்த்தகர்களுக்கும், வளர்ந்து வரும் தொழில் முனைவோர்களுக்கும் விருதுகள் வழங்கப்படும். இவ்விருது விழாவில் சுமார் முப்பது(30) விருதுகள் வழங்கப்படவிருக்கின்றது.

இரண்டாவது முறையாக நம்பிக்கை நட்சத்திர விருதுகள் 2023 ஏற்பாடு செய்யப்படுகின்றது. சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து பாடுபடும் இந்தியச் சமுதாயத்தின் முன்னோடிகள், சாதனையாளர்கள், கலை மற்றும் சமூக ஊடக கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் இவ்விருது விழாவில் சுமார் முப்பத்து ஐந்து(35) விருதுகள் வழங்கப்படவிருக்கின்றது.
அவற்றில் புகழ்பெற்ற மருத்துவர், வழக்கறிஞர், முன்னுதாரண தமிழ்ப்பள்ளி, ஆசிரியர்(கல்வி), சமூக இயக்கம், ஆசிரியர்(நாளிதழ்), செய்தியாளர்(நிருபர்), எழுத்தாளர் (ஆய்வு), கல்வியாளர், தன்முனைப்புப் பேச்சாளர், சாதனையாளர், விளையாட்டாளர், மூத்த விளையாட்டாளர் போன்ற விருதுகளும் அடங்கும். தேர்வுக் குழுவின் மூலம் இந்த பதிமூன்று(13) வெற்றியாளர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

2022 ஆம் ஆண்டு நடந்த வெள்ளி விழா கொண்டாட்டத்தின் போது கலைத்துறைக்கு ஆறு(06) விருதுகளை நம்பிக்கைக் குழுமம் வழங்கியது. இம்முறை அந்த எண்ணிக்கை பத்து(10) ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் புகழ்பெற்ற இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், தொகுப்பாளர் வாழ்நாள் சாதனையாளர் விருது - புகழ்பெற்ற மூத்த நடிகர் ஆகிய விருதுகளும் அடங்கும்.
அதோடு கடந்த முறை சமூக ஊடகத்தை சார்ந்த ஆறு(06) கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினோம். இம்முறை அந்த எண்ணிக்கை எட்டு(08) ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புகழ்பெற்ற சமையல் கலை நிபுணர், பயிற்சியாளர் மற்றும் பயிற்றுநர் விருதுகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.
இதில் கலை, சமூக ஊடகம் சார்ந்த பதினெட்டு(18) விருதுகளும் பத்து(10) நாட்கள் நடக்கவிருக்கும் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடும். ஒவ்வொரு பிரிவுகளில் ஐந்து(05) பேர் வேட்பாளர்களாகவும், அவர்களில் மக்களின் மகத்தான ஆதரவை பெற்று அதிக வாக்குகளை பெற்ற நபர் சம்பந்தப்பட்ட விருதினைச் தட்டிச் செல்வார் awards.nambikkai.com.my என்ற அகப்பக்கத்தில் மக்கள் அக்டோபர் 14 முதல் 24ஆம் தேதிவரை வாக்களிக்கலாம்.
இந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கான கலைத்துறை விருதுகளையும் அறிமுகம் செய்து வைத்துள்ளோம். இதில் வாழ்நாள் சாதனையாளர் விருதும் அடங்கும்.
இதனிடையே "மலேசிய மாமனிதர்" துன் சாமிவேலு வாழ்நாள் சாதனையாளர் விருதும் இம்முறையும் வழங்கப்படவிருக்கின்றது.
அச்சு ஊடகமாக இருந்த நம்பிக்கை 2021ஆம் ஆண்டு முதல் இணைய ஊடகமாக உருமாறியது. நமது சமூக ஊடகத்தை 100,000 அதிகமானவர்கள் பின் தொடர்கின்றார்கள். இந்த விருது விழா குறித்த அனைத்து தகவல்களுக்கும் Nambikkai Online சமூக ஊடகங்களை வலம் வரலாம்.
இந்நிகழ்ச்சி குறித்த மேல் விவரங்களுக்கு, தயாளன் சண்முகம்(019-9384818) அல்லது சுஹைனா(010-8833379) அல்லது பார்த்திபன்(016-5624894) ஆகியோர்களை மேலே குறிப்பிடப்பட்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 2, 2026, 5:00 pm
பினாங்கில் ஒரே நேரத்தில் மாநிலத் தேர்தல்களை நடத்துவது கடினம்: சாவ்
June 2, 2026, 4:35 pm
ஜூன் முதல் எல் நினோ அபாயம் அதிகரிப்பு
June 2, 2026, 2:11 pm
காரணமே இன்றி கணவன்-மனைவி மீது கண்ணீர்ப்புகை திரவம் தெளித்த நபர் கைது
June 2, 2026, 2:02 pm
புந்தோங் மின் சுடலையில் ஒய்வு கொட்டகை புதுப்பிக்கப்பட்டது: வின்சண்ட் டேவிட்
June 2, 2026, 12:54 pm
