நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காரணமே இன்றி கணவன்-மனைவி மீது கண்ணீர்ப்புகை திரவம் தெளித்த நபர் கைது

சிரம்பான்: 

எந்தவித முன்விரோதமும் இல்லாத நிலையில், சிரம்பான் 2 பகுதியில் உள்ள உணவகமொன்றின் முன்பாக தம்பதியர் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென கண்ணீர்ப்புகை திரவத்தைத் தெளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட தம்பதியர் பயணித்துக் கொண்டிருந்த காரை, ஹோண்டா அக்கார்ட் கார் ஒன்று நீண்ட நேரம் பின்தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் உணவகத்தின் முன்பாக திடீரென வழிமறித்த சந்தேக நபர், காரிலிருந்து இறங்கி ஆவேசமாக நடந்துகொண்டதுடன், கண்ணீர்ப்புகை திரவத்தைத் தம்பதியர் மீது தெளித்ததாக போலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் போது பெண் பாதிக்கப்பட்டவர் வீடியோ பதிவு செய்ய முடிந்ததுடன், தாக்குதல் நடத்தப்பட்டதற்கான காரணம் தமக்குத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்த தாக்குதலால் இருவருக்கும் கண்களில் கடுமையான எரிச்சல், அரிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்திற்குப் பிறகு தீவிர விசாரணை மேற்கொண்ட போலிஸார், 50 வயதுடைய சந்தேக நபரை அதே இரவு அவரது வீட்டின் முன்பாக கைது செய்தனர்.

இந்த வழக்கு ஆபத்தான பொருட்கள், தாக்குதல் தொடர்பான சட்டப்பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதுடன், மேலதிக விசாரணைக்காக சந்தேக நபரை தடுப்பு காவலில் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த திடீர் தாக்குதல், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset