செய்திகள் மலேசியா
பயங்கர விபத்தில் காரிலிருந்து வெளியே வீசப்பட்ட ஒரு மாதக் குழந்தை: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அபூர்வம்
மலாக்கா:
அலோர் காஜா, மலாக்கா தெங்கா–ஜாசின் விரைவுச்சாலையில், பெட்ரோனாஸ் பாலாய் பாஞ்சாங் எரிபொருள் நிலையம் அருகே நேற்று இரவு நடந்த சாலை விபத்தில், ஒரு மாத ஆண் குழந்தை பயணித்த கார் விபத்தில் சிக்கி வாகனத்திலிருந்து வெளியே வீசப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் பதிவாகியுள்ளது.
இரவு சுமார் 10 மணியளவில் நடந்த இந்த விபத்தில், பெற்றோருடன் புரோட்டான் சாகா காரில் இருந்த குழந்தை, மோதலின் தாக்கத்தால் தலையில் வீக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக, குழந்தை அருகிலுள்ள புல்வெளிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
மத்திய மலாக்கா மாவட்ட போலிஸார், பெட்ரோல் நிலையத்திலிருந்து விரைவுச்சாலைக்கு நுழைய முயன்ற போது, மற்றொரு வாகனத்துடன் மோதியதே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தின் போது குழந்தை தாயின் மடியில் பின்புற இருக்கையில் இருந்ததாகவும், மோதலின் போது வெளியே வீசப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டுநர் காயமின்றி தப்பிய நிலையில், 25 வயதான தாய் முதுகு வலியால் பாதிக்கப்பட்டார். இருவரும் மலாக்கா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர், நிலைமை நிலையானதால் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
போலிஸார் சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் வாகனத்தை அடையாளம் கண்டுள்ளதுடன், 1987 சாலைப் போக்குவரத்து சட்டத்தின் பிரிவு 43(1) கீழ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 2, 2026, 5:00 pm
பினாங்கில் ஒரே நேரத்தில் மாநிலத் தேர்தல்களை நடத்துவது கடினம்: சாவ்
June 2, 2026, 4:35 pm
ஜூன் முதல் எல் நினோ அபாயம் அதிகரிப்பு
June 2, 2026, 2:11 pm
காரணமே இன்றி கணவன்-மனைவி மீது கண்ணீர்ப்புகை திரவம் தெளித்த நபர் கைது
June 2, 2026, 2:02 pm
புந்தோங் மின் சுடலையில் ஒய்வு கொட்டகை புதுப்பிக்கப்பட்டது: வின்சண்ட் டேவிட்
June 2, 2026, 12:54 pm
