நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிம்பாங் ரெங்காம் விபத்தில் பாதிக்கப்பட்ட இருவர் பெர்கேசோவின் 24 மணி நேரப் பாதுகாப்பைப் பெறும் முதல் நபர்கள் ஆவர்: அஸ்மான்

கோலாலம்பூர்:

ஜொகூரின் சிம்பாங் ரெங்காமில் நடந்த ஒரு கோரமான விபத்தில் காயமடைந்த இரண்டு வாகன ஓட்டிகள், நேற்று நடைமுறைக்கு வந்த பெர்கேசோவின் 24 மணி நேரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பலன்களைப் பெறும் முதல் நபர்கள் ஆவர்.

பெர்கேசோ தலைமைச் செயல்முறை அதிகாரி, டத்தோஸ்ரீ டாக்டர் முகமது அஸ்மான் அஜிஸ் முகமது இதனை கூறினார்.

43 வயதான ஹுஸ்னிஸாம் ஹிசாமுடின், 22 வயதான முஹம்மது அமிருல் ஹாசிம் மிஸ்னான் ஆகியோர் பெர்கேசோவின் கீழ் செயல் பங்களிப்பாளர்களாக உள்ளனர்.

இது இத்திட்டத்தின் கீழ் அவர்கள் நோய் விடுப்பு கொடுப்பனவுகள், நிரந்தர ஊனத்திற்கான பலன்களைப் பெறத் தகுதி அளிக்கிறது.

தோள்பட்டை, கையில் காயமடைந்த ஹுஸ்னிஸாம், வாயில் காயமடைந்த முகமது அமிருல் ஆகிய இருவரும் சிகிச்சை, மறுவாழ்வு உபகரணங்கள், தேவைக்கேற்ப வரம்பற்ற மறுவாழ்வு சிகிச்சையைப் பெறத் தகுதியுடையவர்கள்.

பணியிடத்திலோ அல்லது கடமையிலோ விபத்துகள் ஏற்படும்போது பெர்கேசோ பாதுகாப்பு வழங்குகிறது என்பதைப் பலர் புரிந்துகொள்கிறார்கள்.

இருப்பினும், இத்திட்டத்தின் மூலம், விடுமுறை நாட்கள் உட்பட, பணி வரம்பிற்கு வெளியே நிகழும் விபத்துகளுக்கும் சமூகப் பாதுகாப்பு நீட்டிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset