நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அபாயகரமாக வாகனம் ஓட்டியதால் 5 பேர் மரணம்; கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: அந்தோனி லோக்

புத்ராஜெயா:

நேற்று நடந்த ஒரு துயரச் சம்பவத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்த கோர விபத்தை ஏற்படுத்தியதாக நம்பப்படும் ஓட்டுநர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இந்தச் சம்பவம், நடந்திருக்கவே கூடாத ஒரு துயரம்.

பொதுச் சாலைகளில் பொறுப்பற்ற,  அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டியதால் இது நிகழ்ந்தது.

இந்த மிகவும் துயரமான இழப்பிற்காக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வகையான வாகனம் ஓட்டுதல் மிகவும் பொறுப்பற்ற செயலாகும். மேலும் இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

இது தொடர்பாக, விசாரணை ஆவணங்களை விரைவில் அரசு தலைமை சட்டத்துறை தலைவர் அலுவலகத்திற்கு அனுப்புவதை உறுதிசெய்யும் வகையில், போலிஸ் விசாரணையை விரைவுபடுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset