செய்திகள் மலேசியா
ஜொகூரில் 56 தொகுதிகளில் தேசியக் கூட்டணி போட்டியிடுகிறது; 80% தொகுதிப் பங்கீடு நிறைவடைந்தது: ஷாருடின் ஜமால்
ஜொகூர்பாரு:
வரவிருக்கும் மாநிலத் தேர்தலுக்கான ஜொகூர் தேசியக் கூட்டணி தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள், சுமார் 80% இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளன.
ஜொகூர் தேசியக் கூட்டணி தலைவர் ஷாருடின் ஜமால் இதனை தெரிவித்தார்.
மீதமுள்ள 20% இடங்கள் குறித்து மலேசிய இந்திய மக்கள் கட்சி (எம்ஐபிபி), மூடா, ஐபிஆர் உள்ளிட்ட பிற கட்சிகளுடன் தேர்தல் ஒப்பந்தம் மூலமான ஒத்துழைப்பு குறித்தும் பேச்சுவார்த்தைகள் இன்னும் நடைபெற்று வருகிறது.
இதுவரை, தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
சுமார் 80% இடங்கள் ஒதுக்கீடு நிறைவடைந்துவிட்டது.
நாங்கள் தெரிவித்தபடி, தேசியக் கூட்டணி அனைத்து 56 தொகுதிகளிலும் போட்டியிடும்.
தேர்தல் பிரச்சாரத்தில், பெர்சத்து, பாஸ், கெரக்கான், எம்ஐபிபி ஆகிய நான்கு கூட்டணிக் கட்சிகளின் செயல்பாட்டு அமைப்புகளையும் கூட்டணி செயல்படுத்தியுள்ளது என்று ஷாருடின் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 2, 2026, 5:00 pm
பினாங்கில் ஒரே நேரத்தில் மாநிலத் தேர்தல்களை நடத்துவது கடினம்: சாவ்
June 2, 2026, 4:35 pm
ஜூன் முதல் எல் நினோ அபாயம் அதிகரிப்பு
June 2, 2026, 2:11 pm
காரணமே இன்றி கணவன்-மனைவி மீது கண்ணீர்ப்புகை திரவம் தெளித்த நபர் கைது
June 2, 2026, 2:02 pm
புந்தோங் மின் சுடலையில் ஒய்வு கொட்டகை புதுப்பிக்கப்பட்டது: வின்சண்ட் டேவிட்
June 2, 2026, 12:54 pm
