நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தை உடனடியாகக் கலைக்க முடியாது: முஹம்மது காலித்

கோத்தா திங்கி:

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தை உடனடியாகக் கலைக்க முடியாது என்று தற்காப்பு அமைச்சரும் அம்னோ உதவித் தலைவருமான டத்தோஸ்ரீ முஹம்மது காலித் நோர்டின் கூறினார்.

ஜொகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றமும் உடனடியாகக் கலைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இருந்தாலும் மாநிலத்தின் சட்ட, அரசியலமைப்பு செயல்முறைகளை இது கருத்தில் கொள்ளவில்லை.

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தைக் கலைப்பதை எளிதாகச் செய்ய முடியாது.

காரணம் அது நெகிரி செம்பிலானின் யாங் டி-பெர்துவான் பெசார்,  உண்டாங் லுவாக் யாங் எம்பாட் ஆகியோரை உள்ளடக்கிய சில நடைமுறைகளைக் கடந்து செல்ல வேண்டும் என்று கூறினார்.

உண்மையில் இவ்விவகாரத்தில் நான் பதிலளிக்க விரும்பவில்லை. ஏனென்றால் நான் ஒற்றுமை அரசாங்கத்துடனான உறவைப் பேண விரும்புகிறேன்.

ஆனால் உண்மை என்னவென்றால் அது அப்படி செயல்படுத்த முடியாது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset