செய்திகள் மலேசியா
ஆடம்பர ஹோட்டலில் அதிரடி சோதனை: போதைப்பொருள் விருந்து நடத்தியதாக சீன நாட்டவர் மீது சந்தேகம்
கோலாலம்பூர்:
தலைநகரில் உள்ள ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றதாகக் கூறப்படும் போதைப்பொருள் விருந்தில், முக்கிய அமைப்பாளராக செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் சீனப் பிரஜை ஒருவர் போலிஸ் விசாரணையின் வலையில் சிக்கியுள்ளார்.
புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் (JSJN) விசாரணையில், சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம் வழியாக ரகசியமாக இந்த நிகழ்வு விளம்பரப்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த அதிரடி சோதனையில் மொத்தம் 51 பேர் கைது செய்யப்பட்டதுடன், பல்வேறு வகையான போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஆரம்பக் கட்ட விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விருந்தில் கலந்து கொண்டவர்களின் சொந்தப் பயன்பாட்டிற்காகவே பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
போதைப்பொருள் விநியோக கும்பலுடன் நேரடி தொடர்பு இதுவரை கண்டறியப்படாத போதிலும், அதன் மூல ஆதாரத்தைக் கண்டறிய தீவிர புலனாய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனிடையே, கைது செய்யப்பட்ட அனைவரும் பல்வேறு போதைப்பொருள் குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். நிகழ்வின் அமைப்பாளராக சந்தேகிக்கப்படும் சீன நபரும் ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பரபரப்பை ஏற்படுத்திய வகையில், சோதனைக்கு முன்னதாக ஹோட்டல் வளாகத்தில் சுயநினைவிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது. அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் தொடர்பான முழுமையான மருத்துவ அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.
சமூக ஊடகங்கள் மூலம் ரகசியமாக ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்த ஆடம்பர போதைப்பொருள் விருந்து, தலைநகரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 2, 2026, 5:00 pm
பினாங்கில் ஒரே நேரத்தில் மாநிலத் தேர்தல்களை நடத்துவது கடினம்: சாவ்
June 2, 2026, 4:35 pm
ஜூன் முதல் எல் நினோ அபாயம் அதிகரிப்பு
June 2, 2026, 2:11 pm
காரணமே இன்றி கணவன்-மனைவி மீது கண்ணீர்ப்புகை திரவம் தெளித்த நபர் கைது
June 2, 2026, 2:02 pm
புந்தோங் மின் சுடலையில் ஒய்வு கொட்டகை புதுப்பிக்கப்பட்டது: வின்சண்ட் டேவிட்
June 2, 2026, 12:54 pm
