நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜூன் முதல் எல் நினோ அபாயம் அதிகரிப்பு

ஜெனீவா: 

உலக நாடுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் எல் நினோ காலநிலை நிகழ்வு உருவாக 80 சதவீத வாய்ப்பு இருப்பதாக உலக வானிலை அமைப்பு (WMO) அறிவித்துள்ளது.

வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் பதிவாகி வரும் அசாதாரண கடல் வெப்பநிலையே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்த மாற்றம் உலகளாவிய அளவில் வறட்சி, கனமழை, வெப்ப அலைகள், தீவிர வானிலை நிகழ்வுகளை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

WMO-வின் சமீபத்திய கணிப்பின்படி, நவம்பர் மாதத்திற்குள் எல் நினோ உருவாகும் வாய்ப்பு 90 சதவீதத்திற்கும் அதிகமாக உயரக்கூடும். மேலும், உலகின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்தை விட அதிக வெப்பநிலை பதிவாகும் அபாயமும் உள்ளது.

ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ், எல் நினோவை "அவசர காலநிலை எச்சரிக்கை" என வர்ணித்து, அதன் தாக்கம் எல்லைகளைத் தாண்டி வேகமாகப் பரவும் என்று எச்சரித்துள்ளார்.

விவசாயம், நீர் வள மேலாண்மை, சுகாதாரம், எரிசக்தித் துறைகள் அதிகளவில் பாதிக்கப்படக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக வலுப்படுத்துமாறு உலக நாடுகளுக்கு WMO அழைப்பு விடுத்துள்ளது.

வறட்சி, வெப்ப அலை, பருவமழை மாற்றம், இயற்கை பேரிடர்களின் அபாயம் அதிகரிக்கும் நிலையில், உலகம் முழுவதும் காலநிலை எச்சரிக்கை நிலை தீவிரமடைந்துள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset