நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

525 தமிழ்ப்பள்ளிகளுக்கும் மடிக்கணினிகள் கட்டம் கட்டமாக ஒப்படைக்கப்படும்: டத்தோ ரமணன்

காஜாங்: 

525 தமிழ்ப்பள்ளிகளுக்கும் மடிக்கணினிகள் கட்டம் கட்டமாக ஒப்படைக்கப்படும் மித்ரா நடவடிக்கை குழு தலைவர் டத்தோ ரமணன் கூறினார்.

தமிழ்ப்பள்ளிகளுக்கான புதுபிக்கப்பட்ட மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை மித்ரா அறிவித்தது.

இத்திட்டத்திற்காக மித்ரா 2.994 மில்லியன் ரிங்கிடை ஒதுக்கியது. கிட்டத்தட்ட 6 ஆயிரம் மடிக்கணினிகள் 525 தமிழ்ப்பள்ளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. 

முதல் கட்டமாக காஜாங் தமிழ்ப்பள்ளிக்கு 75 மடிக்கணினிகள் வழங்கப்பட்டது.

இந்த மடிக்கணினிகள் மாணவர்களுக்கு முழுமையாக பயனளிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இவ்வேளையில் கூகுள் எடுகேசன் பிரிவு இயக்குநர் ராஜா அஸ்மி அடாம்,  மித்ரா இயக்குநர் நவீந்திரன் நாயர், பள்ளியில் தலைமையாசிரியர் விஜயலட்சுமி ஆகியோருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

இத்திட்டத்தை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு இப்பாராட்டுகள் என்று டத்தோ ரமணன் கூறினார்.

காஜாங் தமிழ்ப்பள்ளியை தொடர்ந்து அனைத்து தமிழ்ப்பள்ளிக்கும் மடிக்கணினிகள் வழங்கப்படும்.

ஆக அதிகமாக ஜொகூர் துன் அமினா தமிழ்ப்பள்ளி 120 மடிக்கணினிகளும் ஆகக் குறைவாக 2 மடிக்கணினிகளும் வழங்கப்படவுள்ளது.

குறைந்த மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட தமிழ்ப்பள்ளிகளுக்கு அந்த 2 மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளது என்று ரமணன் கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன்  

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset