நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட் சற்று வலுவடைந்துள்ளது

கோலாலம்பூர்:

அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட் தொடர்ந்து வலுப்பெற்று வந்த நிலையில் அமெரிக்க டாலர் குறியீடு 0.44 சதவீதம் சரிந்து 106.33 புள்ளிகளாக இருந்தது.

இன்று காலை 9 மணி நிலவரப்படி 4.7255/7300-இல் இருந்த மலேசிய ரிங்கிட் 4.7205/7255 ஆக உயர்ந்தது.

இதற்கிடையில், முக்கிய நாணயங்களுடன் ஒப்பிடும்போது மலேசிய ரிங்கிட் குறைவாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் நாணயத்தின் மதிப்பு ஜப்பான் யென்க்கு எதிராக 3.1719/175 இலிருந்து 3.1756/1792 ஆக குறைந்துள்ளது.

யூரோவுக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு  4.9759/9811-இலிருந்து 4.9651/9698 ஆக சரிவடைந்துள்ளது.

பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 5.7496/7537-லிருந்து 5.73/7357 ஆகவும் குறைந்துள்ளது.

மேலும், மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு ஆசியான் நாணயங்களுக்கு எதிராக ஏற்றம் இறக்கமாகச் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.

தாய்லாந்து பாட்டுக்கு எதிராக 12.7927/8115 இலிருந்து 12.7650/7837 ஆக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்த நிலையில் சிங்கப்பூர் டாலருக்கு எதிராக 3.4442/4478 இலிருந்து 3.4496/4536 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசிய ரூபியா மற்றும் பிலிப்பைன்ஸ் பெசோவுக்கு எதிராக மலேசிய ரிங்கிட் சமமாக வர்த்தகம் செய்யப்பட்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset