நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட் தொடர்ந்து வலுவிழந்து வருகிறது

கோலாலம்பூர்: 

அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு இன்றும் சரிவடைந்துள்ளது. 

இன்று காலை 9.00 மணி நிலவரப்படி, அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட் 4.7150/7195-லிருந்து 4.7220/7270 ஆக குறைந்தது.

இந்த வார இறுதியில் அமெரிக்க டாலர் ஒப்பீட்டளவில் வலுவாக வர்த்தகமாகி வருவதாகவும், கூட்டரசு வட்டி விகிதங்களை உயர்த்தும் போக்கு நாணயச் சந்தையைத் தொடர்ந்து இயக்கும் என்று பங்கு சந்தை கணித்துள்ளது.

இதற்கிடையில், ஜப்பானிய யென் தவிர மற்ற முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட் அதிகமாக வர்த்தகம் செய்யப்பட்டது.

ஜப்பானிய யென்னுக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 3.1492/1524 இலிருந்து 3.1507/1543க்கு சரிந்தது.

யூரோவிற்கு எதிராக மலேசிய ரிங்கிட் 4.9677/9725 இலிருந்து 4.9458/9511 ஆகவும், பிரிட்டிஷ் பவுண்டிற்கு எதிராக 5.7358/7413 இல் இருந்து 5.7075/7135 ஆகவும் வலுவடைந்தது.

மற்ற ஆசிய நாணயங்களுடன் ஒப்பிடும்போது உள்ளூர் நாணயம் ஏற்றம் இறக்கமாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. 

தாய்லாந்து பாட்க்கு எதிராக மலேசிய ரிங்கிட் 12.7626/7796 இலிருந்து 12.7312/7498 ஆக உயர்ந்தது.

சிங்கப்பூர் டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட் 3.4373/4409 இல் இருந்து 3.4372/4411 ஆக உயர்ந்தது.

-அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset