நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சரிந்துள்ளது

கோலாலம்பூர் : 

அமெரிக்க நாணயத்தின் செயல்திறன் தொடர்ந்து வலுவடைந்து வருவதால், அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட் இன்று குறைவாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. 

இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 4.6930/6970-லிருந்து 4.6990/7045- ஆக குறைந்துள்ளது.

அமெரிக்க டாலர் கடந்த வார இறுதியில் சற்று வலுவாக வர்த்தகம் செய்யப்பட்டது.

இருப்பினும், முக்கிய நாணயங்களின் குழுவை விட ரிங்கிட் சிறப்பாக வர்த்தகம் செய்தது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் ஜப்பானிய யென் 3.1482/1511 இலிருந்து மலேசிய ரிங்கிட் 3.1400/1439 ஆக வலுவடைந்தது.

யூரோவிற்கு எதிராக மலேசிய ரிங்கிட்இன் மதிப்பு 4.9802/9845 இலிருந்து 4.9654/9712 குறைந்துள்ளது. 

மேலும், பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக மலேசிய ரிங்கிட் 5.730/5.730 ஆக உயர்ந்துள்ளது. 

இதற்கிடையில், மலேசிய ரிங்கிட் மற்ற ஆசிய நாணயங்களை விட அதிகமாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. 

தாய் பாட்டுக்கு எதிராக மலேசிய ரிங்கிட் 12.8808/8964 இலிருந்து 12.7927/8118-க்குக் குறைந்துள்ளது. 

மலேசிய ரிங்கிட் இந்தோனேசிய ரூபியாவுக்கு எதிராக 303.5/303.9 லிருந்து 303.8/304.4 ஆக குறைந்தது.

மலேசிய ரிங்கிட் பிலிப்பைன்ஸ் பெசோவிற்கு எதிராக 8.29/8.30 உயர்ந்துள்ளது.

சிங்கப்பூர் டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட் 3.4457/4489 இல் இருந்து 3.4370/4415 ஆக உயர்ந்துள்ளது.

-அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset