நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

Duitnow QR  சேவை கட்டணம் - Maybank, Public Bank, CIMB வங்கிகள் விலக்களிக்கின்றன

கோலாலம்பூர் :

Duitnow QR குறீயீட்டைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் விற்பனையாளர்களுக்கான கட்டண விலக்கை மூன்று வங்கிகள், நீட்டிப்பதாக அறிவித்துள்ளன.

இந்நிலையில், Duitnow QR குறியீட்டைப் பயன்படுத்தும் விற்பனையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கும் எண்ணம் தற்போது இல்லை என்று Maybank வங்கி தெரிவித்துள்ளது. மேலும், புதிய அறிவிப்பு வெளியிடப்படும் வரை, அச்சேவைக்குக் கட்டணமில்லை என்று Maybank வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

அதனைத் தொடர்ந்து, Public Bank வங்கியும், தங்கள் தரப்பிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை Duitnow QR குறியீட்டு சேவைக்குக் கட்டணம் விதிக்கப்படாது என்று தெரிவித்துள்ளது.

மேலும், 2023-ஆம் ஆண்டின் இறுதி வரை அந்தச் சேவைக்கான கட்டண விலக்கு நீட்டிக்கப்படவுள்ளதாக CIMB வங்கி தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் வெளியிட்டுள்ளது. 

முன்னதாக, Duitnow QR குறியீட்டின் இயக்குநரான PayNet நவம்பர் முதலாம் தேதி முதல் Duitnow QR குறியீட்டுச் சேவையைப் பயன்படுத்தும் விற்பனையாளர்கள் அல்லது நிறுவனங்களுக்குக் கட்டணம் விதிக்கப்படுமென நேற்று அறிவித்திருந்தது. 

5000 வெள்ளிக்கும் அதிகமான தொகையை உட்படுத்திய பண வர்த்தனை நடவடிக்கைகளுக்கு மட்டுமே 50 சென் கட்டணமாக விதிக்கப்படும் என்று PayNet தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

-அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset