நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கொரோனா பாதிப்பு 12 மடங்கு அதிகரிக்க என்ன காரணம்?: நஜிப் கேள்வி

கோலாலம்பூர்:

பிரதமர் டான்ஸ்ரீ மொஹிதின் யாசின் தலைமையிலான அரசாங்கம் கொரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் அறவே கவனம் செலுத்தவில்லை என முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் குற்றம்சாட்டடி உள்ளார்.

அவ்வாறு பிரதமர் செயல்பட்டு இருந்தால், அரைகுறையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என அவர் தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"அரசாங்கத்தை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்றனர். அவசர நிலை அறிவிக்கப்பட்டதை அடுத்து நாடாளுமன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதன் பிறகேனும் பிரதமர் கொரோனா விவகாரத்தில் கவனம் செலுத்தி இருந்தால், அவசர நிலை காலத்திலும் தொற்றுப் பாதிப்பு எப்படி 12 மடங்கு அதிகரித்திருக்கும்," எனறு நஜிப் கேள்வி எழுப்பி உள்ளார்.

அதிகாரத்தில் நீடிக்க வேண்டும் என்பதில் மட்டுமே பிரதமர் மொஹிதின் யாசினின் கவனம் குறிந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் அரசாங்கம் செயல்பட அம்னோ காரணம் அல்ல என்றும், மொஹிதின் யாசின் ஆட்சிப் பொறுப்பேற்றது முதற்கொண்டே இதுதான் நிலைமை என்றும் சுட்டிக்காட்டி உள்ளார்.

"எனவேதான் அவர் (மொஹிதின்) பதவி விலக வேண்டும் என வலியுறுத்துகிறோம். இதன் மூலம் அரசாங்கம் பெருந்தொற்று விவகாரத்தில் கவனம் செலுத்த முடியும். நோய்த்தொற்று மேலாண்மை கொள்கைகளை வகுப்பதில் நடப்பு அரசாங்கம் தடுமாறிவிட்டது," என்று நஜிப் துன் ரசாக் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset