நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

அடுத்தவர்களின் வயிற்றில் அடித்து வியாபாரம் செய்ய வேண்டாம்: டத்தோ வீரா ஷாகுல் ஹமீத் தாவூத்

ஷாஆலம்:

அடுத்தவர்களின் வயிற்றில் அடித்து தான் வியாபாரம் செய்ய வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. வியாபாரத்தில் போட்டி இருக்கலாம். ஆனால் அது பொறாமையாக மாறி விடக்கூடாது என்று எச்ஆர்டி கோர்ப் தலைமை இயக்குநர் டத்தோ வீரா ஷாகுல் ஹமீத் தாவூத் கூறினார்.

வர்த்தகத்தில் சாதித்து வரும் இந்திய முஸ்லிம் சமுதாயம், வரும் காலங்களில் முன்னோக்கி செல்ல வேண்டும்.

குறிப்பாக தாங்கள் மேற்கொண்டு வரும் வியாபாரங்கள் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.

அதேவேளையில் புதிதாக ஞாபகத் துறைக்கு வரும் இளைஞர்கள் தங்கள் மேற்கொள்ளும் வியாபாரத்தில் முழு கவனத்தை செலுத்த வேண்டும்.

வியாபாரத்தை தொடங்கினால் தோல்வி கண்டு விடுவோம் என்று அச்சம் இருந்தால் யாராலும் வியாபாரத்தில் சாதிக்க முடியாது.

அதை வேளையில் வியாபாரம் செய்பவர்கள் பணம் சேமிப்பதை ஒரு சாதனையாக கூறிக்கொள்ள முடியாது.

பணம் சம்பாதிப்பதை விட நம்மை சுற்றி இருப்பவர்களை எப்படி பார்த்துக் கொள்கிறோம் என்பதுதான் மிகவும் முக்கியம்.

No photo description available.

இதுதான் வியாபாரத்தில் நாம் படைக்கும் சாதனையாகும். மாறாக பணம் அல்ல.

கடந்த காலங்களில் உணவகத் துறைக்கு அந்நிய தொழிலாளர்கள் இல்லாதது பெரும் பிரச்சினையாக இருந்தது.

இதற்கு முன் இருந்த மனிதவள அமைச்சரின் உதவியால் அத் துறைக்கு அந்நியத் தொழிலாளர்கள் கிடைத்தனர்.

இப்போது அந்நியத் தொழிலாளர்கள் இருக்க மற்றொரு பிரச்சினை பெரிதாக இருந்துள்ளது. 

நம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் பல ஆண்டுகளாக உணவகம் வைத்து நடத்தி வருவார்.

அவரின் உணவகத்திற்கு அருகிலேயே மற்றொரு உணவகத்தைத் தொடர்ந்து, அவரின் வயிற்றில் அடிக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது.

இந்த நாட்டில் வியாபாரம் செய்வதற்கு நான் எந்த தடையும் சொல்லவில்லை. 

ஆனால் மற்றவர்களின் வயிற்றில் அடித்து தான் வியாபாரம் செய்ய வேண்டும் என்றால் அப்படிப்பட்ட வியாபாரமே நமக்கு தேவையில்லை.

இது போன்ற விவகாரங்கள் எல்லாம் புதிதாக வரும் தொழிலதிபர்களும் வர்த்தக்கர்களும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

பெர்மிம் பேரவையின் இந்திய முஸ்லிம் தொழில் முனைவோர் மாநாட்டை நிறைவு செய்து வைத்து பேசிய அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இளைஞர்கள் உட்பட இந்திய முஸ்லீம் மக்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் பெர்மிம் பேரவை இந்த வர்த்தக இம்மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

இவ்வேளையில் பெர்மிம் பேரவை உட்பட அனைவருக்கும்  வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாக டத்தோ ஷாகுல் ஹமீத் தாவூத் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset