நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்வு 

கோலாலம்பூர்: 

அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது. 

இன்று காலை 9.22 மணி நிலவரப்படி அமெரிக்க டாலருக்கு எதிராக உள்ளூர் ரிங்கிட் மதிப்பு 4.6865/6920 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட் இன்று RM4.67 முதல் RM4.68 வரை வர்த்தகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், மலேசிய ரிங்கிட் மற்ற முக்கிய நாணயங்களை விட அதிகமாக வர்த்தகம் செய்யப்படுகிறது.

மலேசிய ரிங்கிட் யூரோவிற்கு எதிராக 4.9869/9906- ஆக குறைந்துள்ளது. 

பிரிட்டிஷ் பவுண்டிற்கு எதிராக மலேசிய ரிங்கிட் 5.7372/7439 இலிருந்து 5.7342/7385 ஆக உயர்ந்துள்ளது. 

அதே நேரத்தில், மற்ற ஆசியான் நாணயங்களுடன் ஒப்பிடும்போது மலேசிய ரிங்கிட் ஏற்றம் இறக்கமாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. 

மலேசிய ரிங்கிட்டிற்கு எதிராக தாய்லாந்து பாட்13.0119/0322 இலிருந்து 12.0345/0493 ஆக வலுவடைந்தது.

இந்தோனேசிய ரூபாய்க்கு எதிராக மலேசிய ரிங்கிட் 304.7/305.3-இல் நிலையாக உள்ளது. 

இன்று காலை 10 மணி நிலவரப்படி 1 வெள்ளி மலேசிய ரிங்கிட் இந்திய ரூபாய் 17.71-க்கு விற்பனையாகின்றது. 

-அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset