நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோபமடைந்தால் கோலாலம்பூர் தாங்காது; மில்லியன் கணக்கான பேர் கூட வழிவகுக்காதீர்: சனுசி

பெந்தோங்:

தலைநகரில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவதற்கு அரசாங்கம் வழி வகுக்கக் கூடாது என்று கெடா மந்திரி புசார் டத்தோஸ்ரீ முஹம்மத் சனுசி வலியுறுத்தினார்.

அல் குர்ஆனுக்கு  ஈப்போ தீமோர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாவர்ட் லீ தனது சொந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

இஸ்லாம் தொடர்பான அறிவு இல்லாத ஒருவர் அதை உருவாக்குவது பொருத்தமானது அல்ல.

இந்த விவகாரம் தற்போது நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆகவே இவ்விவகாரம் தொடர்பில் லீக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அப்படி எடுக்கப்படவில்லை என்றால் கோபம் அதிகரித்து மக்களை தெருக்களுக்குத் தள்ளக்கூடும்.

மக்கள் கோபமடைந்து கோலாலம்பூரில் மில்லியன் கணக்கான பேர்
மக்கள் கூடிவிடுவார்கள்.

 அந்த நேரத்தில் எங்களை தவறு செய்ததாக கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

ஆகவே, இந்த விவாகரத்திற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சனுசி வலியுறுத்தினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset