
செய்திகள் மலேசியா
டத்தோ வீரா விருது பெற்ற ஷாகுல் ஹமீது தாவூத்திற்கு பினாங்கு இந்திய முஸ்லிம் இயக்கங்கள் இணைந்து கௌரவிப்பு
ஜார்ஜ்டவுன்:
டத்தோ வீரா விருது பெற்ற ஷாகுல் ஹமீது தாவூத்திற்கு பினாங்கு இந்திய முஸ்லிம் இயக்கங்கள் ஒன்றிணைந்து சிறப்பு செய்தன.
மலாக்கா மாநில ஆளுநர் துன் ஹாஜி அலி ருஸ்தாமின் 74ஆவது பிறந்தநாள் கடந்த மாதம் கொண்டாடப்பட்டது.
ஆளுநரின் பிறந்தநாளை முன்னிட்டு எச்ஆர்டி கோர்ப் தலைமை இயக்குநர் டத்தோ ஷாகுல் தாவூத்திற்கு டத்தோ வீரா எனும் உயரிய விருது வழங்கப்பட்டது.
இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் பிரதிநிதியாக டத்தோ வீரா விருது பெற்ற அவருக்கு இந்திய முஸ்லிம் இயக்கங்கள் கௌரவிப்பு நிகழ்வுகளை நடத்தி வருகின்றன.
அவ்வகையில் பினாங்கு இந்திய முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் சிறப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது.
பினாங்கு இந்திய முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் அமினுல் ஹுசைனி தலைமையில் இந்நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.
பினாங்கு மாநிலத்தில் உள்ள அனைத்து இந்திய முஸ்லிம் இயக்கங்களின் பிரதிநிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
டத்தோ வீரா ஷாகுல் தாவூத் இந்நிகழ்வுக்கு தலைமையேற்று உரையாற்றினார்.
இந்திய முஸ்லிம் சமுதாயம் ஒற்றுமையுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
நமக்குள் ஏற்படும் பிளவுகள் சமுதாய மக்களுக்கு தான் பாதிப்பு என்று அவர் வலியுறுத்தினார்.
நாம் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து செயல்பட்டால் பல சாதனைகளை இந்த நாட்டில் புரிய முடியும். உயரங்களைத் தொட முடியும் என்று தனதுரையில் அவர் குறிப்பிட்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 12:52 pm
ஐந்து மாத குழந்தை சித்ரவதை: குழந்தை பராமரிப்பாளர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
May 9, 2025, 12:51 pm
செமின்யேவில் உள்ள வீட்டில் கொள்ளை: ஐந்து சந்தேக நபர்களைப் போலீஸ் தேடி வருகிறது
May 9, 2025, 11:59 am
பிளஸ் நெடுஞ்சாலையில் நான்கு வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்து: இரு பெண்கள் பலி
May 9, 2025, 10:51 am
சபா மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி- நம்பிக்கை கூட்டணி இணைந்து பணியாற்ற தயார்
May 9, 2025, 10:22 am