நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இனம் என்ற காரணத்தால்  உயர் கல்வி வாய்ப்புகள் பறிக்கப்படக் கூடாது: சுரேன் கந்தா

பெட்டாலிங் ஜெயா :

இந்நாட்டில் இனம் என்ற காரணத்தால்  உயர் கல்வி வாய்ப்புகள் பறிக்கப்படக் கூடாது.

இதுவே ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கோரிக்கை என்று அதன் இணை இயக்குநர் சுரேன் கந்தா கூறினார்.

தற்போது நாட்டில் இந்திய மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்புகள் முறையாக கிடைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

சிறு வயதுடன் கனவுடன் இருக்கும்  உயர் கல்வியை பயில முடியவில்லை.

குறிப்பாக வசதியின்மையால் பலரின் உயர் கல்வி பயில்வதற்கான வாய்ப்பும் விருப்பமும் கனவாகவே போய்விடுகிறது.

இந்நாட்டில் மாணவர்கள் உயர் கல்விக்காக எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும்.

இனத்தை அடிப்படையாக வைத்து உயர் கல்வி வாய்ப்புகள் பறிக்கப்படக் கூடாது.

அதே வேளையில் வசதியில்லாத மாணவர்களுக்கு உபகாசச் சம்பளம் உட்பட இதர திட்டங்களின் வாயிலாக உதவிகள் வழங்கப்பட வேண்டும்.

நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கு உரிய கல்வி வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

அப்படியே உரிமைகள் பறிக்கப்பட்டாலும், நாம் கற்ற கல்வி உலகில் எங்கு சென்றாலும் நம்மை காப்பாற்றும்.

இதுவே ஸ்ரீ முருகன் நிலையத்தின் நம்பிக்கை என்று சுரேன் கந்தா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset