
செய்திகள் மலேசியா
தமக்கெதிரான குற்றச்சாட்டுகளை ராட்ஸி ஜிடின் மறுத்தார்
புத்ராஜெயா :
தமக்கெதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை புத்ராஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் ராட்ஸி ஜிடின் மறுத்துள்ளார்.
கல்வியமைச்சின் ஜே-காவப் புத்தகம் அச்சிடும் திட்டம 80 மில்லியன் ரிங்கிட் குத்தகை வழங்கப்பட்டது.
இந்த குத்தகை எந்தவொரு டெண்டரும் இல்லாமல் நேரடியாக வழங்கப்பட்டது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
குறிப்பாக இந்த விவகாரம் தொடர்பில் இருவரை எம்ஏசிசி கைது செய்துள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் என்னையும் என் மனைவியையும் தொடர்புப்படுத்துகிறார்கள்.
என் மனைவி அரச குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல. அதே வேளையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை.
ஆகையால் இக்குற்றசாட்டுகளில் எந்தவிரு உண்மையும் இல்லை ராட்ஸி ஜிடின் கூறினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்ததில் நடந்த சர்ச்சை தான் என் மீதான இக்குற்றச்சாட்டுகளுக்கு காரணமாக இருக்கலாம்.
மேல் இடத்தில் உள்ளவர்களின் உத்தரவின் அடிப்படையில் தான் இது எல்லாம் நடக்கிறது என்று ராட்ஸி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 12:52 pm
ஐந்து மாத குழந்தை சித்ரவதை: குழந்தை பராமரிப்பாளர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
May 9, 2025, 12:51 pm
செமின்யேவில் உள்ள வீட்டில் கொள்ளை: ஐந்து சந்தேக நபர்களைப் போலீஸ் தேடி வருகிறது
May 9, 2025, 11:59 am
பிளஸ் நெடுஞ்சாலையில் நான்கு வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்து: இரு பெண்கள் பலி
May 9, 2025, 10:51 am
சபா மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி- நம்பிக்கை கூட்டணி இணைந்து பணியாற்ற தயார்
May 9, 2025, 10:22 am