நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

80 மில்லியன் ரிங்கிட் திட்டத்தில் முறைகேடு : ராட்ஸியின் முன்னாள் அரசியல் செயலாளர் உட்பட இருவர் கைது

கோலாலம்பூர் :

அமைச்சின் 80 மில்லியன் திட்டத்தில் நடந்துள்ள முறைகேடு தொடர்பில் இருவரை எம்ஏசிசி கைது செய்துள்ளது.

இதில் முன்னாள் அமைச்சர் ராட்ஸி ஜிடினின் முன்னாள் அரசியல் செயலாளரும் அடங்குவார்.

சம்பந்தப்பட்ட இருவரும் நேற்று இரவு 11 மணிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள் இருவரையும் எம்ஏசிசி கைது செய்தது. 

கைதான இருவரும் அடுத்த நான்கு நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளர்.

சம்பந்தப்பட்ட அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்பட்ட புத்தகம் அச்சடிக்கும் திட்டத்திற்கு 80 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை அங்கீகரிப்பதில் நடந்துள்ள முறைகேடு தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களில் ஒருவருக்கு 20 வயதாகும். அவர் தான் அமைச்சரின் அரசியல் செயலாளர் ஆவார்.

அதே வேளையில் 50 வயதுடைய நிறுவன இயக்குநரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்களின் கைதை எம்ஏசிசி நடவடிக்கை பிரிவு துணை ஆணையர் டத்தோஸ்ரீ அஹ்மத் குசாய்ரி யாஹ்யா உறுதிப்படுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset