நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உதயநிதிக்கு எதிராக மஇகாவின் அமைதி பேரணி: மலேசிய இந்து சங்கம் ஆதரவு

கோலாலம்பூர் :

சனாதன தர்மத்தை இழிவாகப் பேசிய தமிழ்நாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலைக் கண்டித்து இந்தியத் தூதரகத்திடம் மஇகா மகஜர் வழங்கயுள்ளதற்கு மலேசிய இந்து சங்கம் தனது முழு ஆதரவைத் தெரிவிக்கிறது.

அண்மையில், தமிழ்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 

இந்துக்களின் வாழ்வியல் நெறியான சனாதன தர்மத்தை இழிவுப்படுத்தி பேசியும் அதனை ஒழிக்க வேண்டும் எனவும் பேசியது உலக அளவில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. 

இது தொடர்பாக மலேசிய இந்து சங்கம் முன்னமே கண்டனம் தெரிவித்து மலேசியவிற்கான இந்திய தூதரகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், நம் நாட்டில் இந்தியர்களைக் குறிப்பாக இந்துக்களைப் பிரதிநிதிக்கும் மிக பெரிய அரசியல் கட்சியான மஇகா, உதயநிதியின் செயலைக் கண்டித்து அமைதி பேரணி நடத்தி இந்திய தூதரகத்திடம் மகஜர் வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. 

இதற்கு மலேசிய இந்து சங்கம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. மஇகா போன்ற அரசியல் கட்சிகள் குரல் கொடுக்கும்போது நம் குரல்கள் மேலும் வலுப்பெறும் என்பது உண்மை.

எதிர்காலத்தில் இந்துக்களின், இந்தியர்களின் வாழ்வியல் ஆதாரம், நம்பிக்கை, உரிமைக் குறித்து பிறர் இகழ நினைக்கும் போதெல்லாம் இந்திய சமுதாயம் ஒற்றுமையோடு வீறுக் கொண்டு அதனை எதிர்க்கும் என்ற நிலை உருவாக வேண்டும். 

அதற்கு இவை சான்றாக அமையும் என்பது திண்ணம் என்று மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் தங்க கணேசன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset