நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உறுப்பினர்கள் இல்லையென்றால் கிம்மா அழிந்துவிடும்: டத்தோஸ்ரீ சையத் இப்ராஹிம் 

கோலாலம்பூர்:

கிம்மா போன்ற அரசியல் கட்சிகளுக்கு உறுப்பினர்களின் எண்ணிக்கை தான் மிகப் பெரிய பலம்.

உறுப்பினர்கள் இல்லை என்றால் கிம்மா அழிந்து விடும் என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ சையத் இப்ராஹிம் கூறினார்.

கிம்மா கட்சியின் உயர்மட்ட பதவிகளுக்கான தேர்தல் அண்மையில் நடைபெற்ற முடிந்தது.

தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கும் தேசிய தலைவர் என்ற முறையில் நியமனம் செய்தவர்களுக்கும் அதற்கான கடிதங்கள் இன்று வழங்கப்பட்டது.

கட்சியின் துணைத் தலைவராக ஹரிஸ் சிராஜுடின், உதவித் தலைவர்களாக டத்தோ அனுவார் சடாட், ஹுசைன் ஜமால், முஹம்மத் ஹுசைன் உட்பட பலர் கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

புதிய தலைமைத்துவத்தில் அதிகமான புதுமுகங்கள் உள்ளனர். இவர்கள் கட்சியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

அதே வேளையில் கிம்மா அரசியல் ரீதியில் மீண்டும் வலுப்பெற வேண்டும். அதற்கு நமக்கு வலுவான உறுப்பினர்கள் எண்ணிக்கை இருக்க வேண்டும்.

இதற்கான நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில ரீதியில் உள்ள தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

அதை விடுத்து நமக்குள்ளே பிரச்சனைகளை ஏற்படுத்தி அதன் வாயிலாக கட்சி பிளவுபடக்கூடாது.

இதுவே எனது கோரிக்கையாக உள்ளது என்று டத்தோஸ்ரீ சையத் இப்ராஹிம் என்று  கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset