நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

‘டிரை ஐஸ்’ கரியமில வாயுவை நுகர்ந்த நால்வர் மரணம்

தோக்கியோ: 

ஜப்பானில் சவப்பெட்டிகளில் உடல்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் உலர்ந்த ஐஸ்ஸிலிருந்து (டிரை ஐஸ்) வெளியான கரியமில வாயுவை நுகர்ந்ததில் நால்வர் மரணமடைந்தனர். 

இறந்த நால்வரும் 40லிருந்து 70 வயதுக்கு உட்பட்டவர்கள்.

இவ்வாறு மாண்டவர்கள், தங்களின் அன்புக்குரியவர்களின் உடல்கள் இருந்த சவப்பெட்டிகளுக்கு மிக அருகே அதிக நேரம் நின்றதாக ஜப்பானின் யோமுரி ஷிம்புன் நாளிதழ் தெரிவித்தது.

அவோமி, ஒக்கினாவா நகரங்களிலுள்ள வீடுகள், மியாகி, மியாஸாக்கி நகரங்களிலிருக்கும் இறுதிச் சடங்கு நிலையங்கள் ஆகியவற்றில் 2018=ஆம் ஆண்டிலிருந்து 2021-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த மரணங்கள் நிகழ்ந்ததாகப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

இறுதிச் சடங்குகள் நடைபெறும் இடங்கள் மேலும் காற்றோட்ட நிலையில் இருப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படவேண்டும் என்று தலைநகர் தோக்கியோவில் இயங்கும் அகில ஜப்பானிய இறுதிச் சடங்கு இயக்குநர்கள் ஒத்துழைப்பு (ஸென்சொரன்) உள்ளிட்ட அமைப்புகள் வியாழக்கிழமையன்று குரல் கொடுத்தன. 

-அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset