நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு தற்காலிக தடை: ரஷ்யா அறிவிப்பு

ரஷ்யா : 

ரஷ்யாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து காணப்படுகிறது. 

இந்நிலையில் உள்நாட்டில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் விதமாக பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு ரஷ்யா தற்காலிக தடை விதித்துள்ளது.

ரஷ்யா ஒரு நாளைக்கு 9 லட்சம் கலன் டீசலை ஏற்றுமதி செய்கிறது. 

60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் கலன் என்ற வகையில் பெட்ரோல் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

இந்தத் உத்தரவு வந்த நிலையில், ரஷ்யாவில் எரிபொருள் விலை 4 சதவீதம் குறைந்துள்ளது. 

மேலும், தற்காலிக தடையால் உலகச் சந்தையில் விலை உயர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. 

யூரேசியன் பொருளாதார யூனியன் வர்த்தக அமைப்பில் உள்ள அர்மேனியா, பெலாரஸ், கிர்கிஸ்தான், கஜகஸ்தான் நாடுகளுக்கு இந்தத்  தடை கிடையாது.

-அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset