நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கனடாவில் மற்றொரு சீக்கியர் கொலை

புது டெல்லி:

பஞ்சாபில் பல்வேறு குற்ற வழக்குகளில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த கனடாவைச் சேர்ந்த தாதா சுக்துல் சிங் கனடாவின் வின்னிபெக் நகரில் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

இரு குழுக்களிடையே நடைபெற்ற மோதலில் இந்த கொலைச் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என
தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கடந்த ஜூன் மாதம் கொல்லப்பட்டதில் இந்திய உளவு அமைப்புகளின் தொடர்பு உள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியதால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், பஞ்சாப் போலீஸாரால் தேடப்பட்டுவந்தவர், கனடாவில் கொலை செய்யப்பட்டிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset