
செய்திகள் உலகம்
உக்ரைனில் நடக்கும் இனப்படுகொலை குறித்து ஐ.நா.பொது சபையில் ரஷ்யா மீது ஜெலன்ஸ்கி ஆவேசம்
நியூயார்க் :
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 78-வது ஐ.நா. பொது சபை கூட்டத்தொடர் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், ரஷ்யாவிலுள்ள உக்ரைனிய குழந்தைகளைத் திரும்ப சொந்த நாட்டுக்கு கொண்டு வர தங்கள் தரப்பு முயற்சி செய்கிறது. ஆனால், காலம் கடந்து செல்கிறது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசினார்.
ரஷ்யாவிலுள்ள அந்தக் குழந்தைகளுக்கு உக்ரைனை வெறுக்கும்படி கூறப்படுகிறது. அவர்களுடைய குடும்பத்தினருடனான உறவுகள் முறிகின்றன. இது தெளிவாக ஒரு இனப்படுகொலை என்றும் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியுள்ளார்.
அவர் கூட்டத்தொடரில் தொடர்ந்து பேசும்போது, நவீன வரலாற்றில் முதன்முறையாக, தாக்குதலுக்கு உள்ளான தேசத்தின் மீது தொடுக்கப்பட்ட படையெடுப்பை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உண்மையில் ஒரு வாய்ப்பு எங்களுக்கு உள்ளது என்று கூறியுள்ளார்.
சவுதி அரேபியா கடந்த மாதம் நடத்திய அமைதி பேச்சுவார்த்தையில், ரஷ்ய ஆக்கிரமிப்பால் மீறப்பட்ட, சர்வதேச விதிகளின் அடிப்படையிலான ஒழுங்குமுறையை மீட்டெடுப்பதற்கான அமைதி திட்டம் ஒன்றை நாங்கள் முன்மொழிகிறோம் என்று பேசினார்.
ஒற்றுமையே, இதுபோன்ற படையெடுப்புகள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதனை உறுதி செய்யும் என்று அவர் பேசினார்.
இதனை 78-ஆவது ஐ.நா. பொது சபை கூட்டத்தொடரில் அவர் கூறினார்.
-அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 11:55 am
உக்ரேன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷ்யா அதிபர் விளேடிமீர் புதின் அழைப்பு
May 11, 2025, 11:53 am
வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியிக்கு அரசு தடை விதிப்பு
May 10, 2025, 8:35 pm
இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்த ஒப்புதல்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு
May 9, 2025, 2:00 pm
சிங்கப்பூர் முழுவதும் காவல்துறை அதிரடி சோதனை: 313 பேர் விசாரிக்கப்பட்டனர்
May 9, 2025, 10:00 am
கத்தோலிக்க சமூகத்தினரின் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டார்
May 8, 2025, 11:09 am
புதிய போப்பிற்கான முதல் வாக்களிப்பில் பெரும்பான்மை எட்டப்படவில்லை
May 8, 2025, 10:28 am