
செய்திகள் உலகம்
வயது குறைவு என்பதால் அதிகம் விமர்சிக்கப்படுகிறேன் - விவேக் ராமசாமி
வாஷிங்டன் :
அமெரிக்காவில் அடுத்தாண்டு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
டொனால்ட் டிரம்ப் மீது பதிவாகியுள்ள வழக்குகளின் தீர்ப்பைப் பொறுத்தே அவரது தகுதி நிர்ணயிக்கப்படும் எனும் நிலை உள்ளது.
இதனால் குடியரசுக் கட்சியில் அவருக்கு அடுத்த நிலையியுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான 38 வயதான விவேக் ராமசாமிக்கு ஆதரவு கூடி வருகிறது.
இந்நிலையில், இளம் வயதில் அதிபர் வேட்பாளராகக் களமிறங்கும் விவேக் பல விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.
இளம் வயதில் தனது வளர்ச்சியைக் கண்டு பலர் பொறாமை கொள்வதாக விவேக் ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும், தனக்கு வயது குறைவு என்பதால் தான் அதிபர் பதவிக்குத் தகுதியானவன் இல்லை என்று சிலர் கருதுவதாக அவர் தெரிவித்தார்.
சுதந்திர பிரகடனத்தை எழுதும் போது அப்போதைய அதிபர் தாமஸ் ஜெபர்ஸன், 33 வயதே என்பதை அவர்கள் உணர வேண்டும் என்றார்.
வாழ்நாளின் சிறப்பான நாட்களை எதிர்கொள்ளும் வாய்ப்புள்ள ஒருவர்தான் ஒரு நாட்டிற்கு கிடைக்க போகும் சிறப்பான எதிர்கால நாட்களையும் உருவாக்கி தர முடியும்.
சிறப்பான தகுதி, மேன்மையைத் தேடுதல், பொருளாதார வளர்ச்சி, கருத்துச் சுதந்திரம் மற்றும் வெளிப்படையான விவாதம் போன்ற அடிப்படை விஷயங்களைத்தான் அமெரிக்கர்கள் இன்னமும் மதிக்கின்றார்கள்.
இதனை நிலைநிறுத்துவதே எனது லட்சியம். வெறும் விமர்சனங்களை மட்டுமே முன்வைத்து அரசியல் செய்வதை நான் விரும்பவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
கணினி மென்பொருள் துறையிலும், பிற உயர் தொழில்நுட்ப துறையிலும் இந்திய இளைஞர்கள் மிகவும் ஆர்வத்துடன் பெற போராடும் அமெரிக்காவின் ஹெச்-1பி விசா எனும் அந்நாட்டின் உள்நுழையும் நடைமுறையை நீக்கி விடுவேன் என சில தினங்களுக்கு முன் விவேக் அறிவித்தார்.
இதற்கு இந்தியர்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
-அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 11:55 am
உக்ரேன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷ்யா அதிபர் விளேடிமீர் புதின் அழைப்பு
May 11, 2025, 11:53 am
வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியிக்கு அரசு தடை விதிப்பு
May 10, 2025, 8:35 pm
இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்த ஒப்புதல்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு
May 9, 2025, 2:00 pm
சிங்கப்பூர் முழுவதும் காவல்துறை அதிரடி சோதனை: 313 பேர் விசாரிக்கப்பட்டனர்
May 9, 2025, 10:00 am
கத்தோலிக்க சமூகத்தினரின் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டார்
May 8, 2025, 11:09 am
புதிய போப்பிற்கான முதல் வாக்களிப்பில் பெரும்பான்மை எட்டப்படவில்லை
May 8, 2025, 10:28 am