நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜாஹிட் விவகாரத்திற்கு பிரதமர் நாளை மக்களவையில் பதில் கூறலாம்

கோலாலம்பூர் :
ஜாஹிட் விவகாரத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை பதில் கூறலாம் என்று பிரதமர் துறை (சட்டம்) அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் கூறினார்.

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது தொடர்பில் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வருகிறது.

குறிப்பாக நாடாளுமன்றத்தில் இரு குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. இதற்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.

ஆகவே இந்த கேள்விகளுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை பதிலளிக்கலாம்.

நாளை பிற்பகலில் அவர் மக்களவையில் தான் இருப்பார். கடவுல் உத்தரவிட்டால் அவர் நிச்சயம் பதிலளிப்பார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset