
செய்திகள் மலேசியா
கிராமப் புறங்களில் இந்திய இளைஞர்களுக்கு திவேட் தொழில் திறன் பயிற்சி : மனிதவள அமைச்சர் சிவக்குமார்
கோலாலம்பூர் :
கிராமப்புறங்களில் உள்ள இந்திய இளைஞர்களுக்கு திவேட் தொழில் திறன் பயிற்சி திட்டங்கள் மிக விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று மனிதவள அமைச்சர் வி. சிவக்குமார் அறிவித்தார்.
மலேசிய இந்தியர் இளைஞர் மன்றத்தின் தலைவர் தனேஷ் பசிலின் தலைமையிலான பேராளர்கள் மனிதவள அமைச்சர் சிவக்குமார் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
எம்ஐஒய்சி துணைத் தலைவர் சஞ்சய் சங்கரன், பயிற்சி, திறன் பணியகத்தின் தலைவர் சதீஷ் குமார் ராமு, அனைத்துலக பணியகத்தின் தலைவர் பீஷ்மிந்தர் பால் சிங் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்த கலந்துரையாடல், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள இந்திய இளைஞர் சமுதாயத்திற்கு திவேட் திறன்கள் பற்றிய விழிப்புணர்வை வழங்குவதற்கான திட்ட திட்டமிடல் குறித்து விரிவாக பேசப்பட்டது.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் நோக்கம், இந்திய இளைஞர்களுக்கு திவேட் திறன்கள் வழங்கும் பல்வேறு கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளைப் பற்றி அறிந்து, அவர்களுக்கு எதிர்கால வளர்ச்சி மற்றும் வெற்றிக்கான வாய்ப்புகளை வழங்குவதாகும் என்று அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார்.
தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் போதுமான ஆதரவுடன், அதிகமான இளைஞர்கள் திவேட் திறன்களில் ஈடுபடுவார்கள்.
மேலும், இந்தத் துறையில் வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்க அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
ஜொகூர் மாநிலத்தில் முதல் கட்டமாக இந்திய இளைஞர்களுக்கு திவேட் தொழில் திறன் பயிற்சிகள் தொடங்கப்படும்.
தொழில் பாதுகாப்பு சுகாதார கழகத்துடன் இணைந்து மலேசிய இந்தியர் மன்றம் பயிற்சியை நடத்தும்.
மேலும், மலேசிய இந்தியர் இளைஞர் மன்றத்திற்கு 50,000 வெள்ளி வழங்கப்படும் என்றும் அமைச்சர் சிவக்குமார் அறிவிப்பு செய்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 5:16 pm
பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவி குறித்த கேள்விக்குப் பிரதமர் அன்வார் மறுப்பு
May 9, 2025, 12:52 pm
ஐந்து மாத குழந்தை சித்ரவதை: குழந்தை பராமரிப்பாளர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
May 9, 2025, 12:51 pm
செமின்யேவில் உள்ள வீட்டில் கொள்ளை: ஐந்து சந்தேக நபர்களைப் போலீஸ் தேடி வருகிறது
May 9, 2025, 11:59 am
பிளஸ் நெடுஞ்சாலையில் நான்கு வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்து: இரு பெண்கள் பலி
May 9, 2025, 10:51 am
சபா மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி- நம்பிக்கை கூட்டணி இணைந்து பணியாற்ற தயார்
May 9, 2025, 10:22 am