நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்தாங் பெர்ஜூந்தை கல்லுக்குழி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய  திருப்பணி பூர்த்தி அடைய உதவிகரம் நீட்டுங்கள்! 

புத்ராஜெயா :
சுமார் 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த  பத்தாங் பெர்ஜூந்தை ஸ்டார்த்மோர் கல்லுக்குழி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் திருப்பணி வேலைகள் பூர்த்தி அடைய உதவிகரம் நீட்டும்படி   மனிதவள அமைச்சர் சிவக்குமாரை கோவில் நிர்வாகம்  கேட்டுக் கொண்டது.

தற்போது 20 லட்சம் வெள்ளி செலவில் கோவில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள திருப்பணி வேலைகள் முடிவடைய நிதி தேவைப்படுகிறது என்று கோவில் தலைவர் ராமகணேசன் தெரிவித்தார்.

பல கோவில்களுக்கு மானியம் வழங்கி உதவி புரிந்து வரும் அமைச்சர் சிவக்குமார் இந்த கோவிலுக்கு உதவி புரிய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இன்று மனித வள அமைச்சருடன் நடைபெற்ற சந்திப்பில்  கோவில் திருப்பணி குழுச் செயலாளர் தென்னரசு, நிர்வாக குழு உறுப்பினர் குமார், போசனம் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

பத்தாங் பெர்ஜூந்தை சுற்று வட்டாரத்தை சேர்ந்த தோட்டப் பாட்டாளிகளுக்கு  இந்த கோவில் ஒரு தாய்க் கோவிலாக விளங்கி வருகிறது என்று தலைவர்  ராமகணேசன் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset